கணவனை பிரிந்து வாழும் தன்னுடைய மனைவி மாங்கல்யம் எனப்படும் தாலியை கழற்றி வைத்திருப்பது என்பது கணவனுக்கு அதிகபட்ச மனவலிமையை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட அவருக்கு விவாகரத்து வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தாலியை கழற்றி வீசுவது, கணவருக்கு மனரீதியான துன்புறுத்தலை கொடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தனது மனைவி தொடர்ந்து தாலி அணியாததால், மன உளைச்சலில் சிவக்குமார் என்பவர் விவகாரத்து கேட்டு, வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தாலி என்பது திருமண வாழ்க்கையின் தொடர்ச்சியைக் குறிக்கிறது. கணவன் இறந்த பிறகுதான் அகற்றப்படும். இது எதிர்மனுதாரரின் உச்ச பட்ச மன ரீதியான துன்புறுத்தலாக கருதலாம் என்று கூறி, விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.