சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்து பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் சிந்து, சாய்னா, பிரனாய், அஷ்மிதா ஆகியோர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார்கள். இந்த போட்டியில் முதல் கட்டத்தில் சாய்னா நேவால் 21-19 என்ற கணக்கில் வென்றார். இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது கட்டத்தில் 21-11 என்ற கணக்கில் வென்றார்.
இதனால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி இருந்ததால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க முடியவில்லை. எனவே மூன்றாவது கட்டம் நடைபெற்றது. இதில் சாய்னா நேவால் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது சாய்னா நேவால் 21-17 என்ற கணக்கில் வென்றார். அந்த கட்டத்தில் 21-19, 11-21, 20-17 என்ற கணக்கில் வென்றார். இதனையடுத்து உலக தரவரிசையில் 9 வது இடத்தில் உள்ள பிங் ஜியோவை சாய்னா நேவால் தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.