தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு உயர் பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு, கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.