பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நாட்டிற்கு சீனா உதவி செய்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்ததோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது சீனாவும் இலங்கைக்கு உதவுவதாக கூறியுள்ளது.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனா மதிய உணவு திட்டத்திற்காக அரிசி வழங்குவதாக அறிவித்தது. அதன்படி 10,000-ம் டன் அரிசி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 28-ஆம் தேதி சீனா 1000-ம் டன் அரிசியை வழங்கியது. இதைத்தொடர்ந்து மீண்டும் 1,000-ம் அரிசியை வழங்கியுள்ளது.