Categories
மாநில செய்திகள்

அதிமுக அலுவலகம் சீல்….. வழக்கு வரும் ஜூலை 18ஆம் ஒத்திவைப்பு…..!!!!

அதிமுக அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த ஐகோர்ட் நீதிமன்ற இன்று வழக்கை தள்ளி வைத்துள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த திங்கள்கிழமை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். கத்திக்குத்து, அடிதடி, வாகனங்கள் சூரையாடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். மேலும், அதிமுக அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஓபிஎஸ் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கம்ப்யூட்டர், கோப்புகளை எடுத்துச் சென்றதாக இ.பி.எஸ் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

கட்சி விதிப்படி தலைமை நிலையச் செயலாளர்தான் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர் என்றும், தலைமை நிலையச் செயலாளராக பொறுப்பில் நான்தான் இருக்கிறேன். ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு வராமல், அதிமுக அலுவலகம் செல்வார் என எதிர்பார்க்கவில்லை. சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு எதிரானது. எதிர்க்கட்சி அலுவலகமான அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது என இ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. பொதுக்குழு நடந்த ஜூலை 11ஆம் தேதி, அதிமுக அலுவலகத்திற்கு வெளியே நடந்த கலவரம் காரணமாக, சீல் வைக்கப்பட்டது. இந்த சீலை அகற்றக்கோரி, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணையை திங்கட்கிழமை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |