தஞ்சையை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரும் வழக்கறிஞருமான 68 வயதான ராமமூர்த்தி என்பவர் நாளை மறுநாள் நடைபெற உள்ள நீட் நுழைவு தேர்வை எழுத உள்ளார். படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை ஏற்கனவே பலமுறை நிரூபித்துள்ளார். அதாவது 28 டிகிரி முடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது நீட் தேர்வு எழுதுவதின் மூலம் தனது நீண்ட கால ஆசையான டாக்டராக வேண்டும் என்ற கனவுக்கு தொடர்ந்து வெளிச்சம் கொடுத்து வருகிறார். இளைஞர்களுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார்.
திருவாரூர் மாவட்டம் திருவிழிமிழலை கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் என். ராமமூர்த்தி (வயது 68). தஞ்சையில் பால் தணிக்கை துறையில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். இதனால் வேலை பார்க்கும் போதே குடும்பத்துடன் தஞ்சைக்கு வந்துவிட்டார். தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள தமிழ் பல்கலைக்கழகம் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மனைவி கமலி. இவர்களுக்கு அகிலா, கோகிலா என்ற இரண்டு மகள்களும், முத்துராமலிங்கம் என்ற மகனும் உள்ளனர்