தாய்லாந்தில் மயங்கி விழுந்த தாய் யானைக்கு மருத்துவர்கள் CPR கொடுத்து காப்பாற்றிய வீடியோ நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழியில் விழுந்த தன் குட்டியை காப்பாற்ற, குழியில் இறங்கிய தாய் யானை, தலையில் அடிபட்டு மயக்கமடைந்து. இதை பார்த்த மருத்துவர்களும், வனத்துறையினரும் தாயின் நெஞ்சில் குதித்து, அதற்கு CPR கொடுத்து மீட்டனர்; குழியில் விழுந்த குட்டியையும் மீட்டு தாயுடன் சேர்த்தனர். இதயம் – நுரையீரலை மீள உயிர்ப்பிக்கும் சிகிச்சை CPR எனப்படுகிறது.
Categories