நடிகை சுஷ்மிதா சென் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் முன்னாள் உலக அழகியும் ஆவார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் பிரபல நடிகையாக வளம் வந்தார். 2000ம் ஆண்டு ரேனீ என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு அலிசா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார்.
இவ்வாறு திருமணம் செய்யாமல் இவர் குழந்தையை மட்டும் தத்தெடுத்து வளத்து வந்தார். இந்நிலையில் 46 வயதாகும் சுஷ்மிதா சென் 56 வயதான தொழிலதிபர் லலித் மோடியுடன் டேட்டிங்கில் உள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக லலித் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் மாலத்தீவில் நடிகை சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “மாலத்தீவு உள்ளிட்ட உலக சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியுள்ளோம். புதிய வாழ்க்கை… புதிய பயணம்..” என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.