மினி லாரியில் கடத்தி சென்ற பிளாஸ்டிக் கப்புகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி நகர சபை சுகாதார அதிகாரி நாராயணன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் மெயின் ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவளியாக வந்த மினி லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 9 அட்டை பெட்டிகளில் பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் 18 ஆயிரம் டீ கப்புகள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து பிளாஸ்டிக் கப்புகளை கடத்தி வந்த மினி லாரி ஓட்டுனரான மாரிமுத்துவுக்கு அதிகாரிகள் 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் கப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.