சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகிய சூப்பர்ஹிட் படம் சந்திரமுகி ஆகும். இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். எனினும் ரஜினி 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2ஆம் பாகத்தினை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் சந்திரமுகி 2 ஆம் பாகத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளியானது.
பி.வாசு இயக்கக்கூடிய இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அத்துடன் லைகா நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க இருக்கிறது. அண்மையில் சந்திரமுகி பாகம் 2-ன் போஸ்டரானது வெளியாகி இணையதளத்தில் வைரலானது. சிவாஜிகணேசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வைத்து இருந்த டைட்டில் உரிமையை இப்போது லைகா நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.