உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் பில் கேட்ஸ் வருங்காலத்தில் தன் குடும்பத்தினருக்கு போக மீதம் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் நன்கொடை அளிக்க திட்டமிட்டிருக்கிறார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உடைய நிறுவனராக இருக்கும் பில்கேட்ஸ் உலக பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார். பில்கேட்ஸ் பிறருக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். கடந்த 2000 ஆம் வருடத்தில் இவர் அறக்கட்டளை ஒன்றை துவங்கினார். கல்வி மற்றும் சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளுக்கும் அந்த அறக்கட்டளை மூலம் முக்கியத்துவம் வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் இவர், தன் குடும்பத்தினருக்கு போக மீதம் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் தன் அறக்கட்டளைக்கு அளிக்க இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் இந்த மாதத்தில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்த அறக்கட்டளைக்கு அளித்திருக்கிறார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, வருங்காலத்தில் என் குடும்பத்திற்கு ஆகும் செலவு போக மீதமுள்ள சொத்துக்கள் அனைத்தையும் அறக்கட்டளைக்கு கொடுக்க தீர்மானித்திருக்கிறேன்.
நான் இதை தியாகமாக கருதவில்லை. மிக பெரும் சவால்களை எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன். இது மட்டுமல்லாமல் இந்த சமூகத்திற்கு என் வளங்களை திருப்பி கொடுக்கக்கூடிய கடமை எனக்கு உள்ளது என்று நம்புவதாக கூறியிருக்கிறார்.