Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜி.கார்னர் அருகே நேற்று காலை கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.அதே நேரத்தில் அரியமங்கலத்தில் இருந்து திருச்சியை நோக்கி ஒரு கார் சென்றது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதியது. மேலும் லாரி சக்கரத்தில் சிக்கி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |