Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சோபாவில் இருந்து உருண்டு விழுந்த குழந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத பெற்றோர்…!!

சோபாவில் இருந்து விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் பகுதியில் டிரைவரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 9 மாத ரிதனா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் ரிதனாவை வீட்டிலிருந்த சோபாவில் படுக்க வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை சோபாவில் இருந்து உருண்டு தரையில் விழுந்தாள். இதனை பார்த்த பெற்றோர் குழந்தையை மீட்டனர்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை சங்கர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் ரிதனா அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |