Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலியை கொன்றுவிட்டு ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை….. திருச்சியில் பெரும் பரபரப்பு….!!!

கள்ளக்காதலியை கொன்று விட்டு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல்கண்டார் கோட்டை பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், இவருடைய முதல் மனைவிக்கும் விவாகரத்தான நிலையில், 2-வதாக ஒரு பெண்ணை வினோத் குமார் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 2-வது மனைவிக்கும், வினோத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தற்போது விவாகரத்து ஆகும் நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக வினோத்குமார் தன்னுடைய தந்தையை பார்ப்பதற்காக நாகம்மை வீதி விஸ்தரிப்பு பகுதிக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது எதிர் வீட்டில் உள்ள சீனிவாசனின் மனைவி புவனேஸ்வரி என்பவருடன் வினோத் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து‌ நேற்று முன்தினம் சீனிவாசன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வினோத்குமார் புவனேஸ்வரியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் வினோத் குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து புவனேஸ்வரியை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன் பிறகு வினோத்குமார் பழைய மஞ்சத்திடல் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு சென்றார். அங்கு ரயில் வரும் நேரம் பார்த்து திடீரென தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விபத்தில் வினோத்குமார் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை போலீஸ் கமிஷனர் மற்றும் காவலர்கள் வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து புவனேஸ்வரியின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |