Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! அமைதி நிலவும்..! அனுகூலம் உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உடல் ஆரோக்யம் சீராக இருக்கும்.

மனதில் அமைதியும் உற்சாகமும் பிறக்கும். தடைப்பட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். மனதிலிருந்த குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகளும் விலகிச் செல்லும். அனைவருக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். எதிலும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். இன்று தாய்க்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள்.

தந்தையின் உடல்நிலையில் அக்கறை கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறக்கூடிய சூழலும் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் நல்லபடியாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |