Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்னடா இது…! சாக்கடையில் கழுவப்படும் கீரை: அதிர்ச்சி வீடியோ…!!!

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும். இவற்றை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள், சத்துக்களும் கிடைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான நோய்களும் பரவி வரும் சூழலில் காய்கறிகள், கீரைகள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. எனவே நாம் மார்க்கெட் செல்லும் பொழுது மிகவும் சத்து நிறைந்த கீரைகள் கிடைக்கிறதா என்பதை தேடி பார்த்து வாங்கி வருவது வழக்கம்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லும் கீரைகளை கீரை வியாபாரி ஒருவர் சாக்கடைக் கழிவு நீரில் கழுவும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. இந்த கீரைகள் உக்கடம் மார்க்கெட்டு கொண்டு செல்லப்படுகிறது. உணவில் ஆரோக்கியத்திற்காக நம்மால் சேர்க்கப்படும் இந்த கீரைகள் இப்படி கழுவப்பட்டால் நோய்கள் தான் பரவும். எனவே சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.

https://youtu.be/DBQppzgzRTM

Categories

Tech |