மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த எட்டாம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாட்களாக நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை அடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.39 அடி, நீர் இருப்பு 90.92 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1.17 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 25 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக 120 அடியை கொண்ட மேட்டூர் அணை இன்றைக்குள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் மனைவிலிருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர்,நாகை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.