நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு அச்சத்தால் அரியலூரில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 430 மார்க் எடுத்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவி, தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் மாணவியின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது.