தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுக்கு தெலுங்கில் எழுதவோ படிக்கவோ தெரியாது.
தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் நடிகர் மகேஷ்பாபு. இவருக்கு தெலுங்கு சினிமா உலகம் தவிர்த்து பிற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவருக்கு தெலுங்கில் எழுத சொன்னால் தெரியாதாம்.
அவர் தாய்மொழி தெலுங்கு, இருப்பினும் அவருக்கு தெலுங்கில் எழுதவும் படிக்கவும் தெரியாது. இயக்குனர்கள் வசனத்தை சொல்லும் பொழுது அதைக் கேட்டு அப்படியே படங்களில் பேசுவாராம். அவருக்கு அந்த அளவுக்கு நினைவாற்றல் இருக்கின்றது. மகேஷ்பாபு தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் சென்னையில் தான் படித்தார். விஜய் மற்றும் கார்த்திக் அவரின் பள்ளி நண்பர்களாவார்கள் குறிப்பிடத்தக்கது.