Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பை சேகரித்து கொண்டிருந்த பெண்… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் விநாயகம் 6வது தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி பார்வதி (45). இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருகின்றனர். இதில் கணவன்-மனைவி இருவரும் கொடுங்கையூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் லாரிகளில் சேகரித்து கொண்டுவந்து கொட்டப்படும் குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை பிரித்து எடுத்து அதனை பழைய இரும்பு கடையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தில் குடும்பம் நடத்தி வந்தனர்.

அதன்படி நேற்று காலை கணவன் -மனைவி இருவரும் குப்பைகிடங்கில் வழக்கம்போல பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் அங்கு லாரிகளிலிருந்து கொட்டப்பட்ட குப்பைகளை மாநகராட்சி பொக்லைன் எந்திரம் வாயிலாக சமன்படுத்தும் பணியில் அதன் டிரைவரான மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கோயம்பேட்டை சேர்ந்த கதிர்வேல் (33) என்பவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென அங்கு குப்பை பொறுக்கிகொண்டிருந்த பார்வதி மீது பொக்லைன் எந்திரமானது மோதி விட்டது. இதனால் பலத்த காயமடைந்த பார்வதி, கணவர் கண் எதிரேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் காவல்துறையினர் பார்வதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பொக்லைன் எந்திரம் டிரைவர் கதிர்வேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |