Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே நாட்டிலிருந்து வெளியேற முடியாது…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

இலங்கை உச்சநீதிமன்றம் மஹிந்த ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதித்திருக்கிறது.

இலங்கை கடும் நிதி நெருக்கடி சிக்கி பல சிக்கல்களை சந்தித்து நிலைமை கடும் மோசமடைந்துள்ளது. இதனால் கொந்தளித்த மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிர போராட்டத்தை மேற்கொண்டனர். இந்நிலையில் நிதி மந்திரியான பசில் ராஜபக்சேவும்,  முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சேவும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு வந்த போது மகேந்திர ராஜபக்சேவும், பசில் ராஜபக்சேவும் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வரும் 28ஆம் தேதி வரை நாட்டிலிருந்து வெளியேற முடியாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |