கன்னி ராசி அன்பர்களே…!! இன்று குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்து செல்லும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த கூடும். சிறுசிறு அவமானங்கள் வந்துசெல்லும். கூடுமானவரை இன்று நீங்கள் பேச்சை மட்டும் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் ஏற்படும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி இருக்கும். பதறாமல் பக்குவமாக செயல்படுங்கள். இன்று அக்கம்பக்கத்தினர் உடன் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.
உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்த எதிர்பார்ப்புகள் விலகிச் செல்லும். பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். கோபத்தை தவிர்ப்பது இன்று மிகப் பெரிய நன்மையை கொடுக்கும். மாணவச் செல்வங்கள் பொறுமையாக இருந்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை கவனமாக எழுதிப்பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்