ரயிலில் பயணம் செய்யும்போது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது என இந்திய ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மக்களில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். பேருந்து விமானம், டாக்ஸி போன்றவற்றை விட ரயில்களில் அதிக பேர் பயணம் மேற்கொள்கின்றனர். ரயிலில் கட்டணம் குறைவு பாதுகாப்பாகவும் சவுகரியமாகவும் பயணம் மேற்கொள்ளலாம். இதனால் லட்சக்கணக்கானோர் தினமும் ரயில் பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் நிறைய விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளது. அதனை ரயில் பயணிகள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். ரயிலில் பயணிக்கும் போது இந்த தவறை நீங்கள் செய்தால் அபராதம் மட்டுமல்லாமல் சிறை தண்டனையும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதாவது ரயிலில் பயணம் மேற்கொள்ளும் போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. இது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த தவறை யாராவது செய்து அவர்கள் பிடிபட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம். மேலும் ரயிலில் தீயை உருவாக்குவது அல்லது எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது என்பது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 124கில் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்திய ரயில்வே பிறப்பித்துள்ள உத்தரவின்படி மண்ணெண்ணெய், காய்ந்த புல், அடுப்பு, பெட்ரோல், கேஸ் சிலிண்டர், தீப்பெட்டி, பட்டாசு அல்லது தீயை பரப்பும் வேறு எந்த பொருட்களை வைத்துக்கொண்டு பயணம் மேற்கொள்ளக்கூடாது.
ரயில் பயணிகளின் பயணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக ரயில்வே நிர்வாகம் இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறது. மேலும் தீ விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக ரயில்வே வகுத்துள்ள திட்டத்தின் படி ரயில் பயணத்தில் மட்டுமல்லாமல் பிளாட்பார்ம் போன்ற ரயில் வளாகங்களிலும் பயணிகள் யாரும் புகை பிடிக்கக் கூடாது. அவ்வாறு யாராவது பிடிபட்டால் அவருக்கு மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ரயில் பயணத்தின் போதும் ரயில் நிலையங்களிலும் பயணிகள் செய்யும் இந்த தவறுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. குறைந்தது ஆயிரம் முதல் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதனால் ரயில் பயணம் செய்வதற்கு முன் ரயில்வே தொடர்பான விதிமுறைகளை பற்றி தெரிந்து கொண்டு பயணம் மேற்கொள்வது நல்லதாகும்.