Categories
உலக செய்திகள்

நாசா புகைப்படங்கள் வெளியீடு…. கேலி செய்த எலான் மஸ்க்…. வெளியான டுவிட் பதிவு…..!!!!!

அமெரிக்க நாட்டின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்கள் போன்றவை இணைந்து விண்வெளியை ஆய்வு மேற்கோள்வதற்காக ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது. இத்தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவிவட்டப் பாதையிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இப்புகைப்படங்களை சமீபத்தில் நாசா வெளியிட்டது. பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பான ரகசியங்களை அறிவதற்கான தேடலில், இந்த புகைப்படங்கள் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

உலகம் முழுதும் உள்ள அறிவியலாளர்கள் இந்த சாதனையை பாராட்டி வருகின்றனர். அதே நேரம் மீம் கிரியேட்டர்கள் பலர் இந்த புகைப்படங்களை பல விஷயங்களுடன் ஒப்பிட்டு சமூகவலைதளங்களில் கேலி செய்தும் வருகின்றனர். அந்த அடிப்படையில் உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான்மஸ்க் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது நாசா வெளியிட்ட நட்சத்திர மண்டலத்தின் புகைப்படத்தை சமையல் அறையில் உள்ள டைல்ஸ் டிசைனுடன் ஒப்பிட்டு அவர் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவற்றில் நல்ல முயற்சி நாசா என்று கூறப்பட்டுள்ளது. எலான்மஸ்கின் இப்பதிவு டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |