தமிழக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் என்ற அரசாணை 149 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தியும், தற்காலிக ஆசிரியர் நியமித்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கோரியும் 2013ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் சென்னை டி.ஐ.பி. வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு நிர்வாகிகளை கைது செய்து, மற்றவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
இதனையடுத்து திட்டமிட்டு போலீசார் தங்களை கலைத்து விரட்டி விட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் 2013 ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேற்று மீண்டும் போராட்டத்தையும் முன்னெடுப்பதற்காக டி.பி.ஐ. வளாகத்துக்கு வந்தனர். ஏற்கனவே நிறைய பெற்ற போராட்டத்தின் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் மீண்டும் போராட்டத்திற்கு வந்தவர்களை போல அடையாளம் கண்டு ஒவ்வொருவராக கைது செய்தனர். இதில் பெண்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து டி.பி.ஐ. வளாகத்துக்கு வெளியே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.