காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை டேவிட் நகரில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பஞ்சுவாஞ்சேரி என்னும் பகுதியை சேர்ந்த தமிழரசு(28) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படித்து வந்த 3 1/2 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகின்றது. இது பற்றி இந்த குழந்தையின் பெற்றோர் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் தமிழரசுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories