Categories
சினிமா

நடிகர் பிரதாப் போத்தன் இறப்பு…. இன்று உடல் அடக்கம்….. வெளியான தகவல்…..!!!!!

தமிழ் திரையுலகில் முக்கியமான கலைஞர்களுள் ஒருவரான பிரதாப்போத்தன் (70) நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1978ம் வருடம் இவர் ஆரவம் என்ற மலையாளப் படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார். இதையடுத்து 1979ம் வருடம் வெளியாகிய தகர என்ற மலையாளப் திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.

அத்துடன் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியாகிய அழியாத கோலங்கள் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அதன்பின் 1985ம் வருடம் மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமான பிரதாப்போத்தன் இப்படத்திறக்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருதினை பெற்றார். அதுமட்டுமின்றி இவரின் நடிப்பில் வெளியாகிய வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் ஆகிய படங்கள் வாயிலாக அனைவரையும் கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து பிரதாப் போத்தன் நேற்று உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள அவரது வீட்டில் காலமானார். இவரின் மறைவிற்கு திரைத் துறையினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இயக்குனர் மணிரத்னம், நடிகர் கமல், சந்தான பாரதி, பூர்ணிமா பாக்யராஜ், பிரபு, கனிகா, என பலர் நேரில்சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் பிரதாப்போத்தன் உடல் இன்று காலை அவரது இல்லத்திலிருந்து சென்னை, கீழ்ப்பாக்கம் வேலங்காடு மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின் அவரது உறவினர்கள் பிரதாப்போத்தன் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்த பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Categories

Tech |