மேற்கு வங்கத்தில் சென்ற 2 வாரங்களில் மட்டும் 11 மாவட்டங்களில் சுமார் 65 நபர்களுக்கு கருப்பு – காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரதுறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். மாநிலம் முழுதும் கருப்பு -காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில், தீவிர கண்காணிப்பில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேற்கு வங்கத்தில் குறிப்பாக டார்ஜிலிங், மால்டா, உத்தர் தினஜ்பூர், தெற்கு தினாஜ்பூர் மற்றும் கலிம்போங் போன்ற மாவட்டங்களில் அதிகளவிலான கருப்பு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்த கருப்பு காய்ச்சல் நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது மீண்டுமாக தலைதூக்கி இருப்பது மக்களை கவலையடையச் செய்து உள்ளது. மாநில அரசுக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கும் கருப்பு காய்ச்சலை மேற்கொண்டு பரவாமல் தடுக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நோய் கண்டறியப்பட்டவர்களில் ஏராளமானோர் அருகிலுள்ள பிகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கணிசமான நேரத்தை செலவிட்டவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.