பிரபல நாட்டின் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கு செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் வீரராக இருந்து தெக்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கி அரசியலுக்கு வந்தவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கான் அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஆளும் கட்சி எம்பிகளும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆட்சி கலைந்து விடும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் சபாநாயகர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி நிராகரித்துவிட்டார்.
இதை தொடர்ந்து ஜனாதிபதி ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டார். இதன் காரணமாக எதிர்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின் விசாரணையின் போது நம்பிக்கை இல்லா தீர்மானம் நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியதால் இம்ரான் அரசு கலைந்தது. அதன் பிறகு புதிய பிரதமராக செபான் ஷெரிப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ரத்து செய்தது மற்றும் நாடாளுமன்றத்தை கலைத்தது தொடர்பான வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி முன்னாள் சட்ட மந்திரி பவாத் சவுத்ரி, முன்னாள் சபாநாயகர் ஆசாத் சைகர் மற்றும் துணை சபாநாயகர் காசிம் சூரி, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற செனட் சபையில் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.