நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) அவ்வப்போது பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டிவிகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பான சேவைகளையும் அறிமுகம் செய்துவருகிறது. இந்த நிலையில் SBI வங்கி 2 கோடி மற்றும் அதற்கு அதிகமான மொத்த கால வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த புது வட்டி விகிதம் நேற்றிலிருந்தே நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும் ஓராண்டில் முதிர்ச்சி அடையும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 2 வருடங்களுக்கும் குறைவாக எஸ்பிஐ வங்கி அதிகரித்துள்ளது. அதன்பின் 7- 45 தினங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமுமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே 3.50 % வட்டி விகிதம்தான் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் 46 தினங்கள் முதல் 179 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 4.00 % வட்டி விகிதம் வழங்கப்படும் என்றும் 180- 210 நாட்கள்வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.25 % வட்டி விகிதம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி 211 நாட்கள் முதல் ஒரு ஆண்டிற்கும் குறைவான முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.50 % வட்டிவிகிதம் வழங்கப்படும். மேலும் 1 வருடம் முதல் 2 ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 5.25 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படும் என்றும் 2 வருடம் முதல் 3 வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.25 வட்டி விகிதமும், 3 வருடங்கள் மற்றும் 10 வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.50 சதவீத வட்டி விகிதமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதங்கள் கூட்டுறவு வங்கிகளின் உள் நாட்டு டெபாசிட்டுகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.