Categories
தேசிய செய்திகள்

“வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி”…. அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன் அதிரடி கைது….!!!!!!!!

தஞ்சாவூர் மாவட்டம் கடிச்சம்பாடி கிராமம் வாலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். தமுமுக ஒன்றிய பிரமுகரான இவருக்கு நாகப்பட்டினம் முன்னாள் எம் பி எம் அதிமுக அமைப்பு செயலாளருமான கோபால் அவரது மைத்துனரான திருத்துறைப்பூண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேதையன் மகன் குகன் போன்றோர் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டு விரிவுரையாளர் பணியிடம், அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதாக குகன் ஆனந்திடம் கூறியுள்ளார். இது குறித்து ஆனந்தன் மன்னார்குடி தாலுகா கருவக்குறிச்சி கீழத்தெருவை  சேர்ந்த அன்புராஜன் மற்றும் குடவாசல் தாலுகா என்கண் கிராமத்தை சேர்ந்த சண்முகம் போன்றோரிடம் கூறியுள்ளார். இதனால் இருவரும் விரிவுரையாளர் பணிக்காக 20 லட்சத்தை ஆனந்தன் மூலமாக குகனிடம் கொடுத்துள்ளனர்.

இதே போல திருவிடைமருதூர் தாலுகா காட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தீப சங்கர் காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் மறைமலை அடிகள் நகரை சேர்ந்த மாதவன் போன்ற இருவரும் அலுவலக உதவியாளர் பணிக்காக 8,50,000 ஆனந்திடம் கொடுத்திருக்கின்றனர். இதனை அடுத்து வேலைக்காக நான்கு பேரும் வழங்கிய பணத்தை அன்பழகன் குகனிடம் கொடுத்திருக்கின்றார். மேலும் நான்கு பேருக்கும் whatsapp மூலமாக ஐடி கார்டு பணிநியமன ஆணையை குகன் அனுப்பி இருக்கிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்த நான்கு பேரும் நாகப்பட்டினத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று தங்களின் பணி நியமன ஆணை மற்றும் ஐடி கார்டை  காண்பித்து பணியில் சேர வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அப்போது கல்லூரி  நிர்வாகம் பணி நியமன ஆணை போலியானது என தெரிவித்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான்கு பேரும் குகனை மொபைலில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டறிந்தனர்.

அதற்கு குகன் தற்போது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அலுவலக தகவல்கள் வந்திருக்காது. நான் மேலே பேசி விட்டு கூறுகிறேன் என தெரிவித்துள்ளார். அதன் பின் மீண்டும் கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது இதை போல் நிறைய பேர் பணி நியமன ஆணையை  எடுத்துக்கொண்டு வருகின்றார்கள். யாரோ திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள். இதனை நம்ப வேண்டாம் பணி நியமனானை போலியானது என மீண்டும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அன்புராஜ் மணிகண்டன் தீப சங்கர் மாதவன் போன்றோர்  ஆனந்திடமிருந்து பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனந்தன் வீட்டில் இல்லாத போது சென்று அவரது மனைவியிடம் கையெழுத்திட்ட இரண்டு வெற்று  செக்கை  எடுத்து சென்றிருக்கின்றனர். இதனால் ஆனந்தன் குகனை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டபோது அவர் மிரட்டி இருக்கிறார். குகனின் மைத்துனரான முன்னாள் எம்பி கோபாலை தொடர்பு கொண்டு பேசியபோது இதில் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து 2021 ஆகஸ்ட் 16ஆம் தேதி நன்னிலம் காவல் நிலையத்தில் குகன் அவரது மனைவி கோமதி, குகனின் மைத்துனர் கோபால் மற்றும் அவரது மனைவி போன்ற மீது ஆனந்தன் புகார் அளித்துள்ளார். இந்த மனு மீது  போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நன்னிலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆனந்தன் மூன்று புகார் மனுக்களை கொடுத்துள்ளார். இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் நல்லினம் காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையிலான தனிப்படையினர் வேளாங்கண்ணி அருகில் பதுங்கி இருந்த குகனை நேற்று காலை கைது செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |