எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாளை அதாவது ஜூலை 17ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு குறைந்தபட்சம் இரண்டு நகல்கள் வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கட்டாயம் N95 மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
1. எழுதிய அல்லது அச்சடித்த பாட புத்தக பக்கங்கள், துண்டு தாள்கள், ஜியோமெட்ரி/பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பைகள், கால்குலேட்டர்,பேனா, ஸ்கேல் , எழுது அட்டை, பென் டிரைவு, அழிப்பான்,லாக் அட்டவனை, மின்னணு பேனா, ஸ்கேனர் முதலியவை.
2. தொலை தொடர் சாதனங்களான அலைபேசி, புளூடூத், ஹெட்போன், மைக்ரோபோன்,பேஜர், ஹெல்த் பேண்ட் போன்றவை
3. பணப்பை, பாதுகாப்பு கண்ணாடி, கைப்பை, பெல்ட், தொப்பி போன்ற பிற பொருட்கள்.
4, கடிகாரம்/கைக்கடிகாரம், காப்பு, புகைப்பட கருவி.
5. அனைத்து வகை ஆபரணங்கள்.
6. உணவுப் பொருட்கள்
7. நேர்மையற்ற செயலுக்கு மறைத்து பயன்படுத்தப்படும் சாதனங்கள் – மைக்ரோ சிப், புகைப்பட கருவி, புளூ டூத் போன்றவை தேர்வு மையத்தினுள் எக்காரணம் கொண்டும் மேற்கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
8.முழுக்கை ஆடைகளுக்கு முற்றிலும் அனுமதியில்லை. உலோக உணர்வி சோதனைக்கு இடையூறு ஏற்படாத வகையில் வெளிர்நிற அரைக்கை ஆடைகளை அணியலாம்.
9. சோதனை செய்வதற்கு ஏதுவாக, இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
10.செருப்புகள், குறைந்த குதிகால் கொண்ட செருப்புகள் அனுமதிக்கப்படும். ஷூக்கள் அணிய அனுமதியில்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.