Categories
மாநில செய்திகள்

“இன்று முதல் பழைய குற்றால அருவியிலும்”…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. கலெக்டர் அதிரடி அறிவிப்பு…!!!!!!!

இன்று முதல் பழைய குற்றால அருவியிலும் பயணிகள் குளிக்கலாம் என கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்த  நிலையில் பிரதான அருவியான குற்றாலம் மெயினருவி,  ஐந்தருவி, புலியருவி போன்ற அருவிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருவியில்  ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றார்கள். ஆனால் பழைய குற்றால அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை  மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு காரணமாகவும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில்  இன்று முதல் பழைய குற்றால அருவியிலும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் குளிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |