Categories
மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக முதல் ராக்கெட் இஞ்சின் ஆலை…. அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தொடக்கம்….!!!!!!!!

விண்வெளி தொழில்நுட்ப சார்ட்டட் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தனது ராக்கெட் இஞ்சின் ஆலையை சென்னையில் தொடங்கி இருக்கிறது. இது இந்தியாவின் முதல் 3டி பிரிண்டட் ராக்கெட் இன்ஜின் ஆலையாகும். மேலும் ராக்கெட் பேக்டரி என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஆலையை டாட்டா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகர் திறந்து வைத்துள்ளார். அவருடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் உடன் இருந்துள்ளனர்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் 10,000 சதுர அடியில் இந்த ராக்கெட் எஞ்சின் ஆலை அமைந்திருக்கின்றது. இந்த ஆலையில் 400mm×400mm×400mm 3D பிரிண்டர் இருக்கிறது. இந்த ஆலையில் ராக்கெட் எஞ்சின் முழுவதுமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ஒரு வாரத்திற்கு இரண்டு ராக்கெட் இன்ஜின்களை இந்த ஆலையில் உற்பத்தி செய்ய முடியும் என அக்னிகுல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  இந்த ஆலையில் 30 முதல் 35 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Categories

Tech |