நாடு முழுவதும் மீண்டும் கொரானா பரவல் பரவ தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது, முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி ஓரிரு நாட்களில் டிஸ்ஜார்ச் செய்யப்படுவார் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கண்டார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.
அப்போது கூறிய அவர், விமான நிலையங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்டம் நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. 63 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவத் தொடங்கியது. அதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் வழிகளான 13 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் நோய் கண்டறிவதற்கான ஆய்வகத்தை அமைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதற்கிடையில் சென்னை காவிரி மருத்துவமனில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை சந்திக்க அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்று காவல் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளது. மேலும் முதலமைச்சர் தரப்பில் நிர்வாகிகள் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.