முதல்வரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் 18 குழுக்கல் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் துவக்க விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 28-ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற இருப்பதால் அதில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.
இதன் காரணமாக பிரதமர் மோடியை நேரில் சென்று அழைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் முடிந்த பிறகு திடீரென முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் குணமடைந்து வர வேண்டும் என பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து பிரதமர் மோடி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்த போது, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுக்க முடியாததுக்கு வருத்தம் தெரிவித்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளுமாறு பிரதமரிடம் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியை நேரில் சென்று அழைப்பதற்காக திமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டிஆர் பாலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் வருகிற 19-ஆம் தேதி டெல்லிக்கு செல்ல இருக்கின்றனர்.