கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்ப நீதி கேட்டு 3 வது நாளாக உடலை வாங்காமல் போராடி வருகின்றனர். இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து மாணவி ஸ்ரீமதி கடந்த 12ஆம் தேதி இரவு தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து இறந்து போனதாக கூறப்படுகிறது. ஆனால் மாணவியின் தாய்க்கு மறுநாள் காலை 6 மணிக்கு போன் செய்த விடுதி நிர்வாகம் உங்கள் மகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வருகிறது உடனே வாங்க என கூறுகின்றனர். அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து உங்கள் மகள் இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து மருத்துவமனைக்குச் சென்று விசாரித்த போது உங்கள் மகள் மருத்துமனைக்கு வருவதற்கு முன்னாடியே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவி இறப்பு குறித்து பள்ளி நிர்வாகத்தில் கேட்டபோது தொடக்கத்தில் இருந்தை சரிவர பதில் சொல்லவில்லை.
அதன்பிறகு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.இதனையடுத்து கதறி அழுத மாணவியின் தாய், என் மகள் குதித்ததாக கூறப்படும் இடத்தில் ஒரு சொட்டு ரத்தம் கூட இல்லை என்றும் கழுத்து மார்பு பகுதியில் காயங்கள் உள்ளது. கீழே குதித்ததாக கூறப்படுவதால் கை, கால்களில் எந்த அடி படவில்லை, தலையின் பின் பகுதியில் பலத்த காயம் இருந்தது என சடலத்தை நேரில் பார்த்ததாக கூறுகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் மாணவியின் விடுதியில் ரத்தக் கறைகள் படிந்து உள்ள புகைப்படங்கள் வெளியாகியது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து கனியமூர் வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவலில் படி, அந்த ரத்தக் கரை பெயிண்ட் என்றும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அந்த கறை அப்படியே சுவற்றில் இருந்து வருகிறது என்று கூறினர். மேலும் மாணவியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து வருவதால் இதுவரை உடற்கூறு பரிசோதனை நடத்தப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மாணவியின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.