Categories
உலக செய்திகள்

ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம்…. நாடாளுமன்றம் வரும் 19ஆம் தேதி மீண்டும் கூடும்…. வெளியான அறிவிப்பு….!!!!!!!!!!

இலங்கை எதிர்கொண்டு வரும் வரலாறு காணாத பொருளாதார  நெருக்கடி, ஆட்சியாளர்களின்  அரியணையை பறித்து வருகின்றது. மக்களின் புரட்சியால் அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றார்கள். இதனை முன்னிட்டு பல மாதங்களாக அதிபர் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்ந்து முடிவுக்கு வராமல் நீடித்துக் கொண்டிருக்கின்றது. போராட்டம் முற்றியதில் கொழும்பில் உள்ள அதிபர் கோத்தபாய வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்திலும்  குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நாட்டை விட்டு தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சே மனைவியுடன் மாலத்தீவில் தஞ்சம் புகுந்துள்ள அங்கு இருந்தவாறே  ரணில் விக்ரமசிங்கே  நாட்டின் இடைக்கால அதிபராக நியமனம் செய்துள்ளார். மாலத்தீவிலும் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு வலுத்ததால் நேற்று முன்தினம் அவர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பி சென்றுள்ளார். அத்துடன் அதிபர் பதவியும் ராஜினாமா செய்துள்ளார். கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை சபாநாயகரும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே  நேற்று முறைப்படி பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் அந்த நாட்டு சபாநாயகர் மஹிந்தயாப்பா தலைமையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. இந்த அமர்வில் ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் வாசிக்கப்பட்டது.

இதில் இலங்கை நாடாளுமன்றம் வருகின்ற 19ஆம் தேதி மீண்டும் கூடும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதிபர் பதவிக்கான வேட்பு மனுக்கள் அன்றைய தினம் ஏற்றுக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற செயலாளர் செயலாளர் நாயகம் அறிவித்து இருக்கின்றார். அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்னாள் அமைச்சர்கள் அநுரயாப்பா அபேவர்தன, டலஸ் அழகப்பெரும, முன்னாள் ராணுவ தளபதி பீல்ட்  மார்ஷல் சரத் பொன்சேகா போன்றோரும் போட்டியிட விருப்பம் என கூறப்படுகின்றது.

Categories

Tech |