ஓ.பன்னீர்செல்வம் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக சளி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதையடுத்து நேற்று காலை அவருக்கு தொற்று பரிசோதனை மேற்கொண்ட பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
சென்னை அமைந்தகரையில் உள்ள எம் ஜி எம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் பன்னீர்செல்வம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஓ பன்னீர்செல்வம் நேற்று லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நிபுணர் குழுவின் கண்காணிப்பு கீழ் உள்ளார். அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்டு வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.