நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக அரசு மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசின் நிதி உதவி போன்ற நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது அவசியம். இந்நிலையில் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ணா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கோதுமைக்கு பதிலாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது இந்த திட்டத்தில் கோதுமை கிடையாது. இதுவரை இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மூன்று கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் உணவு வழங்கல் துறை ஆணையர் உத்தரவின்படி பயனாளிகளுக்கு கோதுமைக்கு பதிலாக 5 கிலோ அரிசி மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்கள் கோதுமைக்கான ஒதுக்கீட்டை குறைக்க முடிவு செய்துள்ளன. நாட்டில் தற்போது கோதுமை கொள்முதல் குறைந்துள்ள நிலையில் ரேஷன் ஒதுக்கீட்டில் கோதுமையின் அளவை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்.
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் ஜூன் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இலவச ரேஷன் விநியோகத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கோதுமைக்கு பதிலாக 5 கிலோ அரிசி விநியோகப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த முறையும் கோதுமைக்கு பதிலாக அரிசியை அரசு விநியோகிக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த முறையும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமை கிடைக்காமல் போகும் என கூறப்படுகிறது.