Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதல் ஜோடிக்கு மிரட்டல்…. போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்…. உயர் அதிகாரிகள் உத்தரவு….!!

காதல் ஜோடியிடம் செல்போனில் பேசி மிரட்டிய போலீஸ்காரரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகில் வளசரவாக்கத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர், தனது காதலனுடன் காரில் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது தீவிர ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் காவல்நிலையத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உள்பட 2 காவல்துரையினர்கள் தனியாக பேசிகொண்டிருந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் “நாங்கள் இருவரும் காதலர்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம்” என்று காவல்துறையினரிடம் கூறினர்.

இதனையடுத்து காவல்துறையினர் இருவரது பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை வாங்கி இரவு நேரத்தில் இங்கு நிற்க கூடாது என எச்சரித்து விடுத்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நள்ளிரவில் காவலரான கிருஷ்ணகுமார் அந்த கல்லூரி மாணவியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவி தனது காதலனிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் அந்த காவலரை தொடர்பு கொண்டு இதுபற்றி தட்டிக்கேட்டுள்ளார். அப்போது காவலர் கிருஷ்ணகுமார் காதல் ஜோடி இருவருக்கும் ‘வாட்ஸ் அப்’பில் ‘வாய்ஸ் மெசேஜ்’ அனுப்பியும், செல்போனில் தொடர்பு கொண்டும் மிரட்டலாக பேசியுள்ளார். மேலும் கல்லூரி மாணவி குறித்தும் தரக்குறைவாக பேசியுள்ளார்.

இதனால் காதல் ஜோடி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ்காரர் கிருஷ்ணகுமார் மீது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மனு குறித்து விசாரிக்கும்படி மதுரவாயல் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நடத்திய விசாரணையில் காதல் ஜோடியிடம் போலீஸ்காரர் மிரட்டும் தொனியில் பேசியது உறுதியானது. இதனையடுத்து உயர் அதிகாரிகள் காவல்துறையினர் கிருஷ்ணகுமாரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே காவல்துறையினரான கிருஷ்ணகுமார், கல்லூரி மாணவியை தரக்குறைவாகவும், மிரட்டும் தொனியிலும் பேசும் ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |