Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“அதை அப்பவே கேட்டிருப்பார் போல”… வைரலாகும் லலித் மோடியின் “reply my sms”….!!!!!!

லலித் மோடி சுஷ்மிதா சென்னிடம் 13 வருடங்களுக்கு முன்பாக கேட்ட reply my sms டுவிட்டர் பதிவு தற்பொழுது வைரலாகி வருகின்றது.

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி இந்தியாவின் கிரிக்கெட் நிர்வாகிகளில் ஒருவரும் தொழிலதிபரும் ஆவார். இவர் இந்தியன் பிரீமியர் லீகின் தலைவர் மற்றும் ஆணையராகவும், சாம்பியன்ஸ் லீகின் தலைவராகவும் 2005 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவராகவும் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் கழக துணைத் தலைவராகவும் இருக்கிறார். அத்துடன் இவர் மோடி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் மற்றும் கோட்ஃபிரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல்நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார்.

இந்த நிலையில் விரைவில் முன்னாள் மிஸ் யுனிவர் சுஷ்மிதா சென்னை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள லலித் மோடி, கடைசியாக ஒரு புதிய வாழ்க்கை.  ஒரு புதிய தொடக்கத்துடன் தொடங்கியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது சுஷ்மிதாவுடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

reply-my-sms

இதைப் பார்த்த பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்ற 2013 ஆம் வருடம் ட்விட்டரில் சுஷ்மிதா சென்னிடம் “ரிப்ளை மை எஸ்எம்எஸ்”என லலித் மோடி குறிப்பிட்டது தற்பொழுது வைரலாகி வருகின்றது. இதை நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் அப்போதே எஸ்எம்எஸ்-ல் சுஷ்மிதா சென்னிடம் என்ன கேட்டிருப்பார் என யூகித்து வருகின்றார்கள். மேலும் சிலர் அப்போதே சுஷ்மிதா சென்னிடம் டேட்டிங் குறித்து கேட்டு இருப்பாரோ, அவர் ரிப்ளை பண்ணாததால் ட்விட்டரிலும் அதை கேட்டிருப்பார் போல என கூறி வருகின்றார்கள்.

Categories

Tech |