Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூர்- ஊட்டி சாலையில் ஆபத்தான மரங்களை அகற்றும் பணி”…. மும்முரமாக ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர்….!!!!!

கூடலூர்-ஊட்டி சாலையில் ஆபத்தான மரங்களை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் சென்ற ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் உடைந்தது. மேலும் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்ற இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில் மீட்பு படையினர் நான்கு குழுக்களாக பிரிந்து ஓவேலி, கூடலூர் நகரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு ரோந்து பணி சென்றனர்.

அப்பொழுது கூடலூர்-ஊட்டி நெடுஞ்சாலையில் முறிந்து விழக்கூடிய நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை ஆய்வு செய்தனர். அதில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரங்களையும் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். இதுபோல் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிகையாக சாலையோரம் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டார்கள்.

Categories

Tech |