ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் சென்னையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் 5ஆயிரம் கோடிக்கு மேல் உள்ள சொத்துக்கு எப்படி அதிபதி ஆனார் என்று கேள்வி எழுப்பிய அவர் , அந்த பணம் எப்படி வந்தது என்பதற்கான பட்டியலையும் கொடுக்கவிருப்பதாகவும் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், என்னை மிரட்டினால் ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிடுவேன் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். “நான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஓபிஎஸ் பொய் குற்றச்சாட்டுகளை வைக்கிறார். நான் அவரை பற்றிய, யாருக்கும் தெரியாத உண்மைகளை கூறினால் வெளியே தலைகாட்ட முடியாத நிலை அவருக்கு ஏற்படும்” என அவர் ஓபிஎஸ்-ஐ எச்சரித்துள்ளார்.