என்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து உயர் கல்வியில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதன் பிறகு மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களை பொறுத்து படிப்புகளை தேர்வு செய்து அதற்கேற்ற கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது என்ஜினியரிங் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் என்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதனையடுத்து முதல் நாளில் மட்டும் 18 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஜூலை 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் புதிதாக மாணவர்கள் படித்த பள்ளிகளின் மூலமாக என்ஜினியரிங் கல்லூரியில் விண்ணப்பிப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிறகு ஆகஸ்ட் 16-ஆம் தேதி கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால், கலந்தாய்வு கூட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் நாள் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், சிபிஎஸ்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 5 நாட்கள் கூடுதல் அவகாசம் விண்ணப்பிப்பதற்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது