இன்ஜினியர் பெண் டாக்டரை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் பகுதியில் 29 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அசோக் நகர் மாநகராட்சி சுகாதார துறையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு இன்ஜினியரான பிரபாகரன் என்பவருக்கும், இளம்பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஐ.ஐ.டி-யில் வேலை பார்ப்பதாக கூறிய பிரபாகரனுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார், 111 பவுன் தங்க நகை ஆகியவற்றை வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து பிரபாகரன் அடிக்கடி மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதால் அவர் மீது பெண் டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இளம்பெண் தனது கணவரை பற்றி விசாரித்துள்ளார். அப்போது அவர் ஐ.ஐ.டி-யில் வேலை பார்த்து வருவதாக கூறி ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் பிரபாகரனுக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை இருக்கிறது. அதனை மறைத்து பெண் டாக்டரை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.
மேலும் வரதட்சணையாக கொடுத்த நகைகளை பிரபாகரன் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை செய்து செலவழித்ததோடு, பெண் டாக்டரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து பெண் டாக்டர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த போரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.