Categories
உலக செய்திகள்

கோர தாண்டவமாடும் கொரோனா : “560 பேர் பலி , 28000 பேர் பாதிப்பு..!

சீனாவில் வேகமாக பரவிவரும் கொரானா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 560 உயர்ந்துள்ளது.

சினாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  உயிரிழப்புகளால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. எனவே அங்கு  2 புதிய தற்காலிக மருத்துவமனைகள்  கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த வைரஸுக்கு  தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்,  உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சீனா பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது மேலும் சுமார்  28,000-பேர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சீன அரசு அறிவித்துள்ளது

Categories

Tech |