Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தோழியுடன் தங்கியிருந்த சிறுமி…. பாலியல் தொந்தரவு அளித்த தம்பி…. போக்சோ சட்டத்தில் கைது….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் பார்த்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் தந்தை துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வீட்டு வேலைகள் செய்ய பிடிக்காமல் படிப்பதற்கு ஆசைப்பட்ட சிறுமி கரூரில் இருக்கும் தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த தோழியின் தாய் உடல் நல குறைவு காரணமாக திண்டுக்கல்லில் இருந்துள்ளார்.

இதனால் சிறுமி தனது தோழியுடன் திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கும் தோழியின் தம்பியான 16 வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. பின்னர் சிறுவன் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் தோழியுடன் இருந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் 16 வயது சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Categories

Tech |