Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளை மாநகராட்சியுடன் ஒப்படைக்க வேண்டும்…. மேயருக்கு முக்கிய கோரிக்கை….!!!

அரசு பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மண்டலங்களிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று அங்குள்ள குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வுகள் எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 முதல் 22-வது வார்டு வரை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மேயர், துணை மேயர், மண்டல குழு தலைவர், வட்டார துணை ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மாநகராட்சி கூட்டமானது மாமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கலந்தாலோசிக்கப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சி கூட்டமானது மணலி பகுதியில் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி உறுப்பினர்கள் மேயரிடம் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என கூறினார். மேலும் அரசு பள்ளிகளின் தரம் உயர வேண்டுமென்றால், மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு மேயர் பிரியா கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து ஒரு வருடத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

Categories

Tech |