Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் தூங்கிக்கொண்டிருந்தது…. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆய்வு…!!!

நடைபாதை மேம்பாலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள லயோலா கல்லூரி அருகில் புதிதாக நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குப் பிறகு தயாநிதி மாறன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார்.

அதில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை அமைப்பதற்கு லயோலா கல்லூரி நிலத்தை பகிர்ந்ததால் 6.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கூடிய விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

இதனையடுத்து செய்தியாளர் ஒருவர் சென்னை மாநகராட்சியில் கழிவுநீர் வடிகால் பணிகள் தாமதமாக நடைபெறுவது எதற்காக என கேள்வி எழுப்பினார். அதற்கு தயாநிதி மாறன் கடந்த 10 வருடங்களாக ஆட்சி புரிந்த அதிமுக அரசில் நகராட்சி நிர்வாகங்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் தான் கழிவு நீர் வடிகால் பணிகள் தாமதமாக நடக்கிறது. ஆனால் தற்போது இருக்கும் நம்முடைய முதல்வர் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்வதால் கூடிய விரைவில் கழிவுநீர் வடிகால் பணிகள் முடிவடையும் என கூறினார்.

Categories

Tech |